#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன ஆச்சு நடிகை நிக்கி கல்ராணிக்கு..? நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி..! கவலையில் ரசிகர்கள்.!
நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. டார்லிங் படத்தை அடுத்து மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இருக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம்.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிக்கி கல்ராணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "கடந்த வாரம் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தெரிட்டனுகோட்டதாகவும், அதன் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்த அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.