கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நீச்சல் குளத்தில் குழு குழு குளியல் போடும் பிரியா பவானி ஷங்கர்! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.
நடிகை பிரியா பவானி ஷங்கர் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
சீரியல் டு சினிமா என கலக்கிவரும் ஒருசில நடிகைகளில் பிரியா பவானி ஷங்கரும் ஒருவர். சீரியல் மூலம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்ற இவர் மேயாத மான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார். அந்த படமும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
அதன்பின் மான்ஸ்டர், மாபியா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம், பொம்மை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுபோக இந்தியன் 2 உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ள இவர் சினிமா போக அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
இந்நிலையில் தான் நீச்சல் குளத்தில் குளிக்கும் சில புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.