#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முஸ்லீமை எதுக்கு கல்யாணம் பண்றீங்க?.., நிறத்தையும், உடலையும் வைத்து ரொம்ப கிண்டல் பண்ணாங்க - தமிழ் நடிகை ஓபன்டாக்..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை பிரியாமணி. இவர் தமிழில் அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், இராவணன், சாருலதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தனது திரையுலக பயணத்தில் பல விமர்சனத்தை சந்தித்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது உடல் தோற்றம் மற்றும் நிறத்திற்கு தான் விமர்சிக்கப்பட்டதாகவும், எனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்தபோது மோசமாக விமர்சனம் செய்யப்பட்டேன் என்றும், எதற்காக முஸ்லீம் நபரை திருமணம் செய்கிறீர்கள் என்றும் கேட்டார்கள். எனக்கு எதைப்பற்றியும் கவலை இலை என தெரிவித்துள்ளார்.