"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"நான் நடித்ததிலேயே மிகவும் அருவருப்பான படம் இதுதான்" இளைய தளபதி விஜய் பட நடிகை மனம் திறந்த பேட்டி..
பாலிவுட் திரை உலகில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. மாடல் அழகியான இவர் உலக அழகி பட்டம் வென்று தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தில் கதாநாயகியாக முதன்முதலில் நடித்தார்.
இதன்பிறகு தமிழில் நடிப்பதை தவிர்த்து வந்த பிரியங்கா சோப்ரா ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்தார். பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கதாநாயகியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தற்போது பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டிற்கு தாவினார். தற்போது ஹாலிவுட் திரைப்படங்கள் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரது சினிமா வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார்.
அப்பேட்டியில் ப்ரியங்கா சோப்ரா கூறியதாவது, "நான் ஒரு திரைப்படத்தில் கமிட்டானேன். அந்த திரைப்படத்தில் படபிடிப்பின் போது இயக்குனர் கொடுத்த டயலாக் எல்லாம் கேவலமாக இருந்தது. எனக்கு அங்கு நடிக்கவே அருவருப்பா இருந்தது. அந்த படத்தின் பெயரை என்னால் குறிப்பிட முடியாது. வேறு வழியில்லாமல் அந்த படத்தை நடித்து முடித்தேன் என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.