#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! என்றும் இளமையாக இருக்கும் நடிகை ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய மகளா!! செம ஷாக்கான ரசிகர்கள்!!
90 காலக் கட்டங்களில் தமிழ் சினிமாவில் தொடையழகியாக, கவர்ச்சி தாரகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி,கார்த்திக், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரம்பாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை ரம்பா 2010ஆம் ஆண்டு கனடாவில் தொழில் செய்துவரும் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளாக பிரிந்து இருந்த ரம்பா மற்றும் அவரது கணவர் மீண்டும் சமாதானமாகி ஒன்று சேர்ந்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போது ரம்பாவின் குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டனர். மேலும் சமீபத்தில் ரம்பா தனது மூத்த மகள் லான்யாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அதை கண்ட நெட்டிசன்கள் நடிகை ரம்பாவிற்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.