#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடஅட.. இவருக்கு மட்டும் வயசு குறைஞ்சுகிட்டே போகுதே! நடிகை ரம்பா இப்போ எப்படி இருக்காங்க பார்த்தீங்களா! குவியும் லைக்ஸ்கள்!!
90ஸ் காலக் கட்டங்களில் தமிழ் சினிமாவில் ரஜினி,கார்த்திக், விஜய்,அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அப்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரம்பா தொடையழகி என அழைக்கப்பட்டார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகை ரம்பா 2010ஆம் ஆண்டு கனடாவில் தொழில் செய்துவரும் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பா நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் ரம்பா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, எனது சின்ன அழகிய உலகம் என பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஒவ்வொரு வருஷமும் உங்களுக்கு வயசு குறைஞ்சுகிட்டே போகுதே என கூறி வருகின்றனர்.