"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
டீப் பேக் ராஷ்மிகா வீடியோ விவகாரம்; 3 ஆண்டுகள் சிறை தண்டனை - மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஏஐ தொழில்நுட்பம் கொண்டு மாற்றி, கவர்ச்சியான உடையில் நடிகை லிப்டுக்குள் நுழைவதை போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவைக்கண்ட பலரும் முதலில் நடிகை ராஷ்மிகா கவர்ச்சியாக வந்ததாக நினைத்து ஏமாற்றம் அடைந்தனர். இந்த வீடியோ நடிகையின் கவனத்திற்கும் செல்லவே, அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிர்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் இனி 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.
போலியான வீடியோக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.