#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உன்னை சந்திக்க வேண்டும் என்பது விதி... காதல் மழையில் உருகிய நடிகை கார்த்திகாவின் பதிவு... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகளான கார்த்திகா தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து கார்த்திகா அன்னக்கொடி, புறம்போக்கு, வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் இன்றி இருந்த கார்த்திகா தனது தந்தையுடன் இணைந்து பிசினஸில் கவனத்தை செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திகாவுக்கு ரோகித் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
தற்போது வருங்கால கணவரான ரோகித்துடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பாகிந்த கார்த்திகா புகைப்படத்துடன் உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்று பதிவிட்டுள்ளார்.