#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சீரியல் நடிகருடன் பூவே பூச்சூடவா நடிகை ரேஷ்மாவிற்கு திருமணம் எப்போது? அவரே போட்டுடைத்த சுவாரஸ்ய தகவல்!!
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ‘பூவே பூச்சூடவா’. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்.
ரேஷ்மாவும் அதே சீரியலில் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதனும் காதலித்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே இருவரும் அறிவித்திருந்தனர். மேலும் தற்போது ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற தொடரில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா அவ்வபோது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். மேலும் அவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், உங்களுக்கு திருமணம் எப்போது என கேட்டுள்ளார். அதற்கு ரேஷ்மா மிகவும் விரைவில் என பதிலளித்துள்ளார்.