#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. 87 வயதாகும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி இப்போ எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 70'ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்து பலரின் மனதையும் கொள்ளை கொண்டவர் சரோஜாதேவி. இவர் வீட்டில் பூஜை நடைபெற்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை சரோஜாதேவி கன்னடத்தில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் என்ற படத்தில் 17 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் 1957ஆம் ஆண்டு வெளிவந்த திருமணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் சிவாஜிகணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்பட்ட அவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
Sarojadevi house pooja pic.twitter.com/Mjumciwocb
— Manobala (@manobalam) August 20, 2021
அவர் இறுதியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 83 வயதாகும் அவர் தற்போதும் அழகாக காணப்படுகிறார். இந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் பூஜை நடைபெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தை இயக்குனரும், நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.