#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு ரெடியான பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை! மாப்பிள்ளை இவர்தானா! அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாதஸ்வரம். இந்தத் தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக சென்ற அதில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மத்தியிலும் பெருமளவில் பரிச்சயமானவர் ஸ்ருதி.
அதைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ள ஸ்ருதி விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரிலும் ஆரம்பத்தில் பாரதியின் அக்காவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த பேச்சே இல்லை. இந்த நிலையில் அவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சந்தோசமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது நடிகை ஸ்ருதிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வக்கீலான அரவிந்த் என்பவருடன் திருமணம் செய்ய குடும்பத்தினர்களால் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பூச்சூடல் நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஸ்ருதி தனது திருமண தகவலை மிகவும் சந்தோசமாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.