#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்!! நடிகை சினேகாவின் மகன் எப்படி வளர்ந்துட்டார் பாருங்க!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..
நடிகை சினேகாவின் மகன் 6 வயதை கடந்துள்ளநிலையில், அவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. சிரிப்பழகி என வர்ணிக்கப்படும் இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய்யுடன் இவர் நடித்த வசீகரா திரைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சினேகா - பிரசன்னா தம்பதியினரின் மகன் 6 வயதை கடந்துள்ளநிலையில், சினேகா தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், சினேகாவின் மகன் இவ்வளவு வளர்ந்துட்டாரா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.