#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் தொலைக்காட்சியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை!! இதுதான் காரணமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 7ன் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா இருவரும் பிடித்தனர். மேலும் இரண்டாம் இடத்தை விக்ரம் பிடித்து 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நெக்லெஸ் பரிசாக பெற்றார்.
மேலும் இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்று 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை பெற்றார். இந்த முடிவிற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதனை கடுமையாக விமர்சனம் செய்து நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே பாடும் திறமை பெற்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. 5 போட்டியாளர்களில் புண்யாவும் விக்ரமும்தான் இசை ரீதியாக திறமைகள் கொண்டவர்கள். மேலும் சத்யபிரகாஷ் வெற்றி பெறாத போதே போங்காட்டம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அது வைரலான நிலையில் அவர் தற்போது அதே சூப்பர் சிங்கர் பற்றி விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,சூப்பர் சிங்கர் வெற்றியாளர் குறித்து தவறாக பதிவு செய்துவிட்டேன். கடந்த ஜுனியர் சூப்பர் சிங்கர் சீசனில் ஹிருத்திக்கிற்கு வெற்றியாளர் விருது கொடுத்தது மிகவும் சரியான விஷயம்.மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
#vijaytv I believe SS winner is never given to a contestant who is technically superior.Punya&Vikram are musically brilliant among the 5.bongu started from Satyaprakash not winning the tittle எப்பவாவது நியாயமா சங்கீத்த்தை மட்டும் கௌரவிக்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்....
— sripriya (@sripriya) November 10, 2019