#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடி ஆத்தி!! நடிகை டாப்ஸியா இது!! நியூ கெட்டப்.. மாஸ் லுக்... இணையத்தளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
நடிகை டாப்சியின் நியூ லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் டாப்சி. ஆடுகளம் படத்தை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்தார் டாப்ஸி.
காஞ்சனா படமும் இவரது சினிமா பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் நடித்து அங்கும் பிரபலமானார் நடிகை டாப்ஸி. மேலும் இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் இவர், தற்போது அவரது கிரிக்கெட் பிளேயர் லுக் உள்ள மாஸ் புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட , இந்த புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.