#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐஸ்வர்யா ராயிடம் அந்த மாதிரி கேள்விகளை கேட்ட பத்திரிக்கையாளர்.. பதலடி கொடுத்த உலக அழகி.?
உலக அழகியான ஐஸ்வர்யா ராய் எப்போதும் கோலிவுட் திரை உலகில் பரபரப்பாக பேசப்படுபவர். இவர் கல்லூரி காலங்களிலருந்தே மாடலிங் துறையில் பிரபலமானவராக இருந்தார். தமிழில் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் 'இருவர்' திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இப்படம் வெற்றிபடமாக இல்லாத போதிலும், படவாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த 'ஜீன்ஸ்' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இரண்டு ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
மேலும் 2009ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரம் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.
தற்போது ஒரு விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா, ஏன் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "ஒவ்வொரு படத்தின் கதையையும் கேட்டறிந்து அதில் தனது கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அறிந்து நடித்து வருவதாகவும், இன்னும் ஒரு மாணவி போல கற்றுக்கொண்டு நடிப்பதாகவும்" இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.