வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இதுவரை யாருக்கும் தெரியாத அஜித் ஷாலினியின் காதல் கதையின் ரகசியம்.. பேட்டியில் உண்மையை கூறிய ஷாலினி.!
கோலிவுட் திரையுலகில் சில படங்களில் ஒன்றாக நடித்த பின் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்டார் ஜோடிகளின் வரிசையில் அஜித் ஷாலினி தம்பதியர்களும் ஒருவராவார். ஆனால் இவர்களின் காதல் எப்படி உருவானது என்பது குறித்து திரைதுறையினருக்கே தெரியாதாம்.
இதன்படி 12ஆம் வகுப்பு மாணவியான ஷாலினி முதன்முதலில் 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல்படமே மிகபெரிய ஹிட்டாகி தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. இப்படத்திற்கு பின் அமர்களம் திரைபடத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதுபோன்ற நிலையில் ஒரு பேட்டியில், அமர்களம் திரைபடத்தில் அஜித் கேட்டுகொண்டதால் தான் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அமர்களம் படத்தில் நடித்ததிலிருந்து தான் அஜித், ஷாலினி காதல் உருவானது என்று கிசு கிசுக்கபட்டு வந்தது.
இதுகுறித்து ஷாலினியிடம் கேட்டபோது, "முதன்முதலில் 'காதல் மன்னன்' படத்தில் ப்ரிமியர் ஷோவில் தான் சந்தித்தோம். அப்போது அஜித் என்னிடம் உங்களுக்கு சுருள் முடி நன்றாக இல்லை. காதலுக்கு மரியாதை படத்தில் உங்கள் முடி காற்றில் அசைந்ததை பார்க்க மிகவும் அழகாக இருக்கும் என்று கூறினார். அவர் மரியாதையுடன் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது. இவ்வாறு எங்கள் காதல் உறவு தொடங்கியது" என்று கூறிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.