#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கலக்கலான கல்யாண வீடியோவை வெளியிட்ட அமலாபால்! ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சும்மா கிறங்கடிக்கிறாரே!!
தமிழில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை அமலாபால். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த அவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அமலா சுதந்திரப் பறவையாக வலம் வருகிறார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் வெப்சீரிசில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பாலின் திருமண கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட பேச்சுலர் பார்ட்டியில் கையில் பாட்டிலுடன் அமலாபால் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் அமலாபால் தற்போது அபிஜித்தின் திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கலக்கலாக உள்ளார்.