#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அம்மன் படத்தில் வந்த குழந்தையா இது? கொழுக் மொழுக்கென இப்போ எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். மேலும் தமிழில் சாமி படங்களுக்கு பெருமளவில் வரவேற்பு உள்ளது. அவ்வாறு அனைத்து சாமி படங்களுக்கும் முன்னோடியாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அம்மன்.
கோடி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கிய இப்படத்தில் சௌந்தர்யா, சுரேஷ், வடிவுகரசி, ரம்யாகிருஷ்ணன், ராமி ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிராஃபிக்ஸ், அமானுஷ்யம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த அம்மன் படத்தில் தனது அசால்ட்டான நடிப்பால் அனைவரையும் அசத்தியவர் குழந்தை அம்மனாக நடித்த சிறுமி தான்.
அவரது பெயர் சுனைனா. அவருக்கு தற்போது 32 வயதாகிறது. திருமணமாகி குழந்தையுடன் செட்டிலான இவர் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே தெலுங்கில் 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொழுகொழுவென இருக்கும் சுனைனா கணவருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அம்மன் பட குழந்தையா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.