வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கேன்சரால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஓட்டு போட வந்த பிரபல நடிகை! பாராட்டும் ரசிகர்கள்!!
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரிசையில் நின்று தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற அங்காடித்தெரு படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமான சிந்துவும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
தமிழில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பணமின்றி உதவிகேட்டு சில காலங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார். பின்னர் பலரும் உதவி செய்த நிலையில் அண்மையில் அவருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்தது.
இந்த நிலையில் வாக்களிக்க வந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய அவர் வாக்களித்த பின்பு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.