#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தின் ரீல் மகளுக்கு கிடைத்த வாய்ப்பு.. கதாநாயகியாக நடிக்கப் போகிறாரா.?
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
இதன் பின்பு தமிழில் விசுவாசம், மிருதன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன் பின்பு கதாநாயகியாக மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வரும் அனிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார். இப்புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பின்பு தனுஷ் இயக்கத்தில் இறங்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.