#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. என்னம்மா இந்த மாதிரியொரு போஸா.! தோழிகளுடன் அட்ராசிட்டி செய்த அனிகா!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. அதனை தொடர்ந்து அவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார். மேலும் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து செம பேமஸ் ஆனார். தற்போது அனிகா கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அனிகா தற்போது நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள இரட்சன் தி கோஸ்ட் படத்தில் போதைக்கு அடிமையான பெண் ரோலில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் படத்தில் நடித்த தோழிகளுடன் அட்ராசிட்டி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் என்னம்மா போஸ் இது! என கூறியுள்ளனர்.