#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடஅட.. தலைவர் கெத்து காட்டுறாரே! அசத்தலான அப்டேட்டுடன் அண்ணாத்த படக்குழு வெளியிட்ட மாஸ் புகைப்படம்!!
விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பல தடைகளுக்கு பிறகு படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதாவது நவம்பர் 4 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் மாஸ் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வைரலாகி ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.