#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். அவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். மேலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. இந்த தம்பதியினருக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான கதீஜா ரஹ்மானுக்கு கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கதீஜா இஸ்லாமிய கோட்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்கக் கூடியவர். மேலும் புர்கா இல்லாமல் எங்கும் வெளியே செல்ல மாட்டார். அதுமட்டுமின்றி அவர் அப்பாவைப் போலவே இசையில் ஆர்வம் கொண்டவர். கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் பெயர் ரியாஸ்தீன் ஷெய்க் மொஹமுத்.இவர் தொழிலதிபராக இருப்பதாக கூறப்படுகிறது.