#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனுஷின் அசுரன் படத்திலிருந்து வெளியான கருணாஸின் மகன் புகைப்படம்! இதோ!
வடசென்னை, மாரி 2 படங்களை தொடர்ந்து அடுத்ததாக அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடக்கி, வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும் கூடுதலாக இந்த படத்தில் பிரபல நடிகர் கருணாஸின் மகன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. படத்தில் நடிகர் தனுஷின் சிறுவயது தோற்றத்தில்தான் கருணாஸின் மகன் கென் நடிப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அசுரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கென்னின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடைய லுக்கும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.