4 நாள் முடிவில் அவதார் 2 திரைப்படம் இத்தனை கோடி வசூலா... கொண்டாட்டத்தில் படக்குழு!!



Avatar 2 world wide box office collection

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்து உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் தான் அவதார். பல வித்தியாசமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அனைவரையும் வியப்பில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது பிரம்மாண்டத்தின் அடுத்தகட்டமாக அவதார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கியுள்ளது. அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் கடந்த 16 ஆம் தேதி மொத்தம் 160 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Avatar 2

இந்நிலையில் தற்போது அவதார் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அப்படம் வெளியாகி 4 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 5000 கோடி வரை வசூலை பெற்றுள்ளதாம். வரும் நாட்களிலும் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர்.