மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்.. என்ன படம் தெரியுமா?



Avm produce Ayan movie Telugu remake

தமிழ் சினிமாவில் பழங்காலத்திலிருந்து தற்போது வரை புகழ் பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தான். ஆனால் சமீப காலமாக இந்த நிறுவனம் சார்பாக எந்த திரைப்படங்களையும் தயாரிக்காமல் மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது.

AVM studios

இந்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்க உள்ளது. ஆனால் அந்த திரைப்படம் தமிழில் இல்லையாம். தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர்.

AVM studios

அதன்படி கடந்த 209 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான அயன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.