மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
இனிமே இது என்னோட வேலை.. ஏலியனுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்.! ரசிகர்களை கவர்ந்த அயலான் ட்ரைலர்!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த படத்தை ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
அயலான் படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன்,ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களை கவரும் வகையில், புதிய தொழில்நுட்பங்களுடன் ஏலியன்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. வித்தியாசமாக உருவாகியுள்ள அயலான் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.