அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
"ஆளுநருக்கு சட்டப்பேரவையில் வாக்கிங் செல்வது தான் ஒரே வேலை" - துணை முதல்வர் உதயநிதி கலாய்.!
2025 ம் ஆண்டின் தமிழ்நாடு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு உரை ஆற்றச் சென்ற ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவுபெற்றவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவையை விட்டு வெளியேறினார். மேலும், இதுதொடர்பாக தனது கண்டன அறிக்கையை வெளியிட்ட ஆளுநர், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தை அவமதிக்கிறது என கூறினார்.
தமிழ்நாடு ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு மோதல்
இந்த விசயத்திற்கு அரசுத்தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டபோது, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசியகீதம் இசைப்பதே மரபு என கூறப்பட்டது. இதுதொடர்பான விவாதம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு - ஆளுநர் இடையே நடந்து வருகிறது. பாஜக ஆளுநருக்கு ஆதரவாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம்; தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்.!
உதயநிதி கலாய்
இந்நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஆளுநருக்கு சட்டப்பேரவையில் நடைப்பயிற்சி செல்வது தான் வேலை. அவர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கிளம்பிவிடுவார்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: "ஆளுநர் ரவியே வெளியேறு" - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு.!