#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாகுபலி படத்தில் இருந்ததைவிட பாதி உடல் எடையை குறைத்த பிரபாஸ்.. எல்லாம் அதற்காகத்தானாம்.. வைரல் புகைப்படம்..
ஆதி புருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் தனது உடல் எடையை பாதி அளவு குறைந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
பாகுபலி 1 , பாகுபலி 2 படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன தீதியாகவும் சரி, பாகுபலி படம் மாபெறும் வெற்றிபெற்றது. இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் பிரபாஸ்.
பாகுபலி படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை கரடுமுரடாக மாற்றி, பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக மாறியிருந்த பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து தான் நடித்த சகோ படத்திலும் அதே உடற்கட்டுடன் தான் நடித்தார். தற்போது இயக்குனர் ஓம் ரவுத் இயக்கும் ஆதி புருஷ் என்ற படத்தில் நடித்துவருகிறார் பிரபாஸ்.
இந்த படத்தில் பிரபாஸ் முழுக்க முழுக்க ராமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால், கதைக்கு ஏற்றாற்போல் அவரது உடல் எடையை குறைக்க கூறி படக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையை குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்த பிரபாஸ் தற்போது தனது முந்தைய உடல் எடையில் இருந்து பாதியாக குறைத்துள்ளார்.
உடல் எடை குறைந்த அவரது தற்போதைய புகைப்பதனால் இணையத்தில் வைரலாகிவருகிறது.