சன் டிவிக்கு திடீரென போடப்பட்ட அபராதம்! மன்னிப்பு கேட்கவும் உத்தரவு! ஷாக் ஆன ரசிகர்கள்!



benality for sun tv kalyana parisu serial

தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளையோ, பெண்களையோ, கர்ப்பிணி பெண்களையோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களையோ, கூலி வேலை செய்பவர்களையோ இழிவுபடுத்தாமல் சன்டிவியில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும் கொலை, மதவெறி, ஜாதிவெறி, அரசியல் ப்ரோமோஷன் இவற்றை தூண்டும் விதமாகவோ எவ்வித ககாட்சிகளையும்  ஒளிபரப்ப மாட்டார்கள். அதிகாலையில் பக்தியில் தொடங்கி, நாட்டு நடப்பு, பகல் நேரங்களில் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் பொழுதைப்போக்கும் வகையில் பிரமாண்ட சீரியல், மாலை நேரங்களில் இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் சினிமாவுக்கு இணையான தொடர்களையும், இரவில் மகிழ்ச்சியுடன் தூங்குவதற்கு ஏற்றாற்போல காமெடி ப்ரோக்ராமுடனும் முடிப்பார்கள். 

Sun tv

இதனாலேயே அதிகப்படியானோர் வீட்டில் சன்டிவியின் சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கும். இந்நிலையில் நாள்தோறும் இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு என்ற தொடருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கிடையில் இந்த சீரியலில் கடந்த மாதம் ஒளிப்பரப்பப்பட்ட சில காட்சிகளில் கூட்டுப்பலாத்காரக் காட்சி மற்றும் அதுகுறித்த தீவிரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இதற்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சன் டிவிக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதமும் சன் நெக்ஸ்ட் தளத்தில் அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேலும் கல்யாண வீடு சீரியல் ஒளிப்பரப்பாகும் போது 30 வினாடிகள் கொண்ட மன்னிப்பு காட்சிகளையும் ஒளிப்பரப்ப வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.