அந்த விஷயத்துல நீங்க ஜீரோ! அசீம்- மகேஸ்வரிக்கு இடையே வெடித்த மோதல்! களேபரமான பிக்பாஸ் வீடு.! வைரல் வீடியோ!!



bigboss-today-promo-viral-SA3GA5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது சண்டை, மோதல், வாக்குவாதங்கள் என எதற்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த ஜி.பி முத்து தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து முதல் வார இறுதியில் சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆனார்.

அவர்களை தொடர்ந்து கடந்த வாரம் இண்டிபெண்டன்ட் சிங்கரான அசல் கோலார் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த வாரம் டிவி சேனல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் செய்தி வாசிப்பது, நடிப்பது, குக்கிங் ஷோ, டான்ஸ் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அசீம் மற்றும் மகேஸ்வரிக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அசீம் மகேஸ்வரியை கண்டு உங்களுக்கு நியூஸ் பற்றிய நாலேஜ் இல்லை.. ஜட்ஜ் பன்றதுல நீங்க ஜீரோ என்று கடுமையாக பேசியுள்ளார். மேலும் மகேஸ்வரியும் அசீமை எதிர்த்து சத்தமாக பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி விறுவிறுப்பை கூட்டியுள்ளது.