#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் படம் வெற்றி பெற இன்னும் இத்தனை கோடி தேவையா? இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா!
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்தது போல இந்த படமும் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் பிகில் படம் இதுவரை 123 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இன்னும் இந்த படம் வெற்றி பெற 20 கோடி தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரைக்கு வரவிருந்த ஆதித்யா வர்மா படம் ரீலிஸ்க்கு இந்த வாரம் வராமல் தள்ளிப்போய்யுள்ளதாக கூறப்படுகிறது.