கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஒரு தலை காதல் விவகாரம்.. தந்தையை கொன்று பெண்ணை கடத்தி சென்ற இளைஞர்!
ஒரு தலை காதல்
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான முனிராஜூக்கு 17 வயது மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடராஜ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், மாணவியை வலுக்கட்டயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடித்துவிட்டு தினமும் டார்ச்சர்.. கடப்பாரையால் ஒரே அடி.. கணவரை கொன்று தூக்கிய மனைவி.!
போக்சோ வழக்கு
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கட்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த வெங்கடராஜ், மாணவியை காதலிப்பதாக மீண்டும் தொந்தரவு செய்துள்ளார்.
நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வெங்கட்ராஜ் தனது நண்பருடன், மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையை எழுப்பி மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும், வழுக்கை திரும்ப பெறும்படியும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு மாணவியின் தந்தை மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ், மாணவியின் தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால், பலத்த காயமடைந்த முனிராஜ் சமூக இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே வெங்கட்ராஜ், மாணவியை கடத்தி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வெங்கடராஜையும், மாணவியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவேரி ஆற்றின் அழகை ரசிக்க வந்த கல்லூரி மாணவர் கொடூர கொலை; போதை கும்பல் வெறிச்செயல்.!