#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் நடந்த மோசடி வேலை! யாரும் ஏமாறாதீர்கள்! அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக, இளம் பெண்களின் கனவுகண்ணனாக வலம் வருபவர் நடிகர் விஜய தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி, கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்துள்ளார். மேலும் தமிழிலும் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மொழி புரியவில்லை என்றாலும் இவருக்கெனவே படங்கள் பார்ப்பவர்கள் ஏராளம்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய தேவரகொண்டாவை கதாநாயகனாக வைத்து படம் உருவாகவுள்ளதாக கூறி கதாநாயகி மற்றும் சக நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும், மேலும் இதனால் பண மோசடி நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து விஜய்தேவரகொண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தயாரிப்பு நிறுவனங்கள் நான் அவர்களது படத்தில் நடிப்பதாக கூறி நடிகர்களின் தேர்வு நடத்தி வருவதாக அறிந்தேன். நான் எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும் அதனை அதிகாரப்பூர்வமாக எனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவிப்பேன். எனவே இவர்களைப் போன்றவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இதுபோன்று மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.