கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஒரே யூரின் நாத்தம்.. தியேட்டரா இது?.. சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பெண்கள் ஆவேசம்.!
நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம், செப்டம்பர் 05 அன்று வெளியானது. பலரும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, குடும்பம்-குடும்பமாக சென்று திரையரங்கில் படம் பார்த்து வருகின்றனர். திரையரங்கங்களும் இன்று நவீனப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒருசில இடங்களில் மட்டுமே திரையரங்கம் இன்னும் பழைய நிலையில் இருக்கிறது.
சென்னையை பொறுத்தமட்டில் ஏராளமான திரையரங்குகள் நவீன மயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், சென்னை ஆல்பர்ட் தியேட்டர் முந்தைய தலைமுறைக்கு மிகவும் பரிச்சயமானது எனினும், இன்று அதன் நிர்வாக குளறுபடிகளால் மிகவும் அவப்பெயரை சந்தித்து இருக்கிறது.
தி கோட்
அந்த வகையில், தி கோட் படத்தை பார்க்க சென்ற பெண்மணி ஒருவர், தியேட்டரின் நிலையால் மேலாளரிடம் சண்டையிட்டு தனது டிக்கெட் தொகையை மீண்டும் வாங்கி சென்றார். இந்த விஷயம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் தனது மனநிலையைப் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: விஷ்ணு என்ன தப்ப பேசிட்டார்?.. சொற்பொழிவாளரின் பின்தொடர்பாளர் பேட்டி.!
மூட்டை பூச்சிக்கடி
அந்த பேட்டியில், "ஆல்பர்ட் தியேட்டரில் தி கோட் படம் பார்க்க ரூ.225 கட்டணம் வாங்கினார்கள். 225 ரூபாய் பணம் கொடுத்து நான் வாங்கிய சீட்டு உடைந்து சேதமாகி இருக்கிறது. கழிவறை சுத்தமாக இல்லை. திரையரங்கை சுத்தம் கூட செய்யவில்லை. அதனை புதுப்பிக்கமாட்டார்களா?. மூட்டை பூச்சி இருக்கிறது. இவர்களை போன்ற ஆட்களையெல்லாம் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு இழுத்து விடவேண்டும்.
சிறுநீர் நாற்றம், பாக்கு எச்சில்
யூரின் நாற்றம், பாக்கு போட்டு துப்பி இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு அருவருத்தக்க வகையில் உணர்வு ஏற்படுகிறது. அனைவரும் காசு கொடுத்துதான் வருகிறார்கள். ஒரு திரையரங்கில் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதாரணமாக பல திரையரங்கம் இருக்கிறது. ஆல்பர்ட் தியேட்டர் இப்படி இருக்கக்கூடாது என இருக்கிறது. ஏசி சுத்தமாக இல்லை. ஓனரை கூப்பிடுங்கள் என்றால், என்னை தயவு செய்து பணத்தை வாங்கிவிட்டு செல்லுங்கள் என கெஞ்சுகிறார்கள்" என கூறினார்.
இதையும் படிங்க: அத்தை மக எனக்கு வேண்டாம்?.. பெற்றோரின் வற்புறுத்தலால் மருத்துவ மாணவர் தற்கொலை?.. சென்னையில் சோகம்.!