கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பல இளைஞர்களுடன் காதல்.. 19 வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த செவிலியர்.. போலீஸ் ஸ்டேஷனில் கதறல்.!
பல இளைஞர்களை காதல்வலையில் வீழ்த்திய பெண், இறுதியில் கைது நடவடிக்கை இல்லாமல் தப்பினார்.
சென்னையில் உள்ள ஆவடி, வேப்பம்பட்டு, பாலாஜி நகரில் வசித்து வருபவர் தேவி. இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வசித்து வருகிறார்கள். செவிலியரான தேவி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டில் தங்கியிருந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 4 மாதமாக அவர் பணி இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், திடீரென மாயமானனார். இதனால் அவரின் தாய் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரித்தபோதே, அதே பகுதியில் வசித்து வந்த தேவியின் உறவினரான சாய்ராம் (வயது 19) என்ற இளைஞரும் மாயமானது உறுதியானது.
இதையும் படிங்க: கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்; இளைஞருக்கு ஜாமின் மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு.!
19 வயது இளைஞருடன் ஓட்டம்
அதிகாரிகள் இருவரையும் தேடி வந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் வழக்கறிஞர் உதவியுடன் காவல் நிலையம் வந்தனர். அப்போது, இவர்கள் இருவரும் கடந்த 3 மாதமாக முறைதவறிய காதலில் இருந்து வந்ததும், இதனால் நெருங்கிப்பழகி, ஒருகட்டத்தில் சென்னை பெசன்ட் நகர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டது உறுதியானது. திருமணத்திற்கு பின் இருவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிலையில், காவல் நிலையம் வரை புகார் சென்றதையடுத்து, வழக்கறிஞர் உதவியுடன் செவ்வாய்பேட்டைக்கு வந்துள்ளனர்.
இளைஞர்கள் குமுறல்
அப்போது, அங்கு வந்த மணி என்பவர், தன்னை தேவியின் தாய்மாமன் எனக்கூறி அறிமுகம் செய்தார். அவர், தேவி தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றியதாக தெரிவித்தார். மேலும், சோழபுரம், காரனோடை பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரும், தேவி தன்னை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து ரூ.5 இலட்சம் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதனால் தலைகிறுகிறுத்துப்போன காவலர்கள், சாய்ராம், தேவி ஆகியோருக்கு அறிவுரை வழங்கி பிரிந்து செல்ல அறிவுறுத்தினர்.
இதனால் இருவரும் தனித்தனியே அவரவர் குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் தேவி சாய்ராம் வேண்டும் என நீண்ட நேரம் அடம்பிடித்தால், அவர் கண்டிப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், தேவியை அடித்து நொறுக்க காத்திருந்த காதல் தோல்வி அடைந்தவர்களும் காவல் துறையினரால் அங்கிருந்து எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
எந்த விதமான புகாரும் பெறப்படாத காரணத்தால், தேவி தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்தார்.
இதையும் படிங்க: திருப்பூர்: பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் கொடூரம்.. பெற்றோர்-மகன் கொலை வழக்கில் கண்ணீர் சோகம்.!