கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வெட்டிப்படுகொலை.. ஓடஓட விரட்டி பயங்கரம்.!
சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருகிறார். இன்று இவர் தனது வீட்டருகே நின்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியது.
அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை கடுமையாக வெட்டிச்சாய்த்து பின் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்... சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த காதலன்.!! நண்பனின் மூலம் ஸ்கெட்ச் போட்ட தந்தை.!!
6 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். 6 பேர் கும்பலுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
ஆதரவாளர்களுடன் ஆம்ஸ்ட்ராங் இருந்தபோதும், 6 பேர் கும்பல் பயங்கர ஆயுதத்துடன் அவர்களை சுற்றிவளைத்த காரணத்தால் எந்த விதமான உதவியும் கிடைக்கப்பெறவில்லை. கொலை சம்பவம் கொடூரமாக அரங்கேறி இருக்கிறது. பலியான ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல புகார்கள் இருந்துள்ளன.
குற்ற வழக்கில் தொடர்புடையவர் கொலை
இவர் ரௌடி கும்பலுடன் தொடர்பு உடையவர் என்று கருதப்படும் நிலையில், தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடந்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
கழுத்து மற்றும் தலை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரின் உயிர் பிரிந்து இருக்கிறது. குற்றவாளிகள் கைதான பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: குடிப்பழக்கத்தால் மூழ்கிய குடி.. காதல் மனைவியை 3 ஆண்டுகளில் கொன்ற கணவன்.. திருச்சியில் அதிர்ச்சி.!