கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: இரவு 8 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோவை, நீலகிரி, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு மழைக்கான அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
அதேபோல, தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், இரவு 08:30 மணிவரையில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 மாவட்டங்களில் மிதமான மழை
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 29 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இரவு 8 மணி வரையில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: காவேரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மறந்தும் அந்த பக்கம் போயிடாதீங்க.!