கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சற்றுமுன்: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை 12 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.!
மயிலை, நாகை, கடலூர், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று தமிழகத்தில் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: மக்களே ரெடியா? வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆனால், வங்கக்கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றுப்பிரிதல் எனப்படும் இயற்கையான நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் மூலமாக வலுப்பெற இயலவில்லை.
இதனால் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகடலோர மாவட்டங்களில் அதிக மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கான வாய்ப்பு
இந்நிலையில், வரும் 3 மணிநேரத்துக்கு, மதியம் 1 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏரி ஆக்கிரமிப்பு வீடை அதிகாரிகள் இடித்துவிடுவதாக அச்சம்; தொழிலாளி பயத்தில் தற்கொலை.!