கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சென்னையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்.!!
சென்னை வில்லிவாக்கம், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் வயது(35). வில்லிவாக்கத்தில் ரவுடியாக வலம் வந்த உதயாவின் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் பல வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் இவர் நேற்று முன் தினம் இரவில் கம்மவார் நாயுடு தெருவில் நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்தார்.
உதயகுமாரை கத்தியால் வெட்டிய கும்பல்
அச்சமயம் அங்கு வந்த இரண்டு பேர் கும்பல் உதயகுமாரை கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். இதனை கண்ட நண்பர்கள் அங்கிருந்து தலைதெரிக்க ஓட்டம் பிடித்த நிலையில், தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தவர் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்; நெல்லையில் பகீர் சம்பவம்.!
ரஞ்சித் கொலையில் உதயகுமார் கைது
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்து வந்த ரஞ்சித் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உதயகுமார் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே வந்துள்ளார்.
பழிக்கு பழியாக கொலை
ஜாமினில் வெளியே வந்த நபரை பழிக்கு பழியாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முதற்கட்டமாக இரண்டு பேரை கைது செய்த நிலையில் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை; சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!