அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
7 மாத டியூசன் காதல்; கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு உயிரைமாய்த்த 14 வயது சிறுமி, 16 வயது சிறுவன்.!!
சென்னையில் உள்ள திருவெற்றியூர் கடல் பகுதியில், இன்று 2 சடலங்கள் கரையோரம் ஒதுங்கி இருந்தது. தகவல் அறிந்த திருவெற்றியூர் காவல் துறையினர், இரண்டு சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறார்களின் கையில் துப்பட்டா
மேலும், 14 வயது மற்றும் 16 வயது மதிக்கத்தக்க பெண் - ஆண் என சிறார்கள் கையில் துப்பட்டா கட்டப்பட்டு இருந்தது. இதனால் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: தூக்கில் சடலமாக தொங்கிய 9 வயது சிறுமி; சந்தேகிக்க வைக்கும் மர்ம மரணம்.. செங்கல்பட்டில் சோகம்.!
டியூசன் பழக்கம்
அதன்பேரில் நடந்த விசாரணையில், பலியான இருவரும் மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்த சிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் டியூசன் சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
7 மாத காதல் தற்கொலையில் முடிந்தது
நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறி, இருவரும் 7 மாதமாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அவர்கள் தங்களின் கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியானது.
மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: திருமணமாகாத விரக்தி; 29 வயது இளைஞர் மதுவில் விஷம்கலந்துகுடித்து தற்கொலை - விருதுநகரில் சோகம்.!