அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
திருமணமாகாத விரக்தி; 29 வயது இளைஞர் மதுவில் விஷம்கலந்துகுடித்து தற்கொலை - விருதுநகரில் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, காசுக்கடை பஜார், பொன்னையா ஆச்சாரி சந்து பகுதியில் வசித்து வருபவர் பலவேசம். இவரின் மகன் உதயகுமார் (வயது 29). இவர் நகை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி
திருமண வயதில் இருந்த உதயகுமாருக்கு, கடந்த 2 ஆண்டுகளாக பெண் பார்த்தும் வரன் அமையவில்லை. இதனால் அவர் எப்போதும் தனக்கு மணமாக பெண் கிடைக்கவில்லையே என மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது சோகம்; முதியவர் கார் மோதி பரிதாப பலி.!
இந்நிலையில், சம்பவத்தன்று உதயகுமார் மதுபானத்தில் எலிமருந்தை கலந்துகுடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மயக்க நிலையில் இருந்தவரை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
தற்கொலை முயற்சி
சிகிச்சை நிறைவுபெறுவதற்குள் குடும்பத்தினரிடம் சண்டையிட்டு வீட்டிற்கு வந்தவர், தலை சுற்றி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீண்டும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
பறிபோன உயிர்
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்.!