கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்; பொறுமை தாங்காமல் மனைவி செய்த காரியம்.! சென்னையில் அதிர்ச்சி.!
சென்னையில் உள்ள வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியில் வசித்து வருபவர் கவுஸ் பாஷா. இவரின் மனைவி ஷாஜிதா பானு. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக தம்பதி வாழ்ந்து வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவால் பாஷா உயிரிழந்ததாக பானு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறை சந்தேகம்
பாஷாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை, வலிப்பு போன்றவை இருந்த நிலையில், பாஷாவின் இறப்பில் உறவினர்களுக்கு சந்தேகம் வரவில்லை. இதனிடையே, வில்லிவாக்கம் காவல்துறையினர், இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: போதையில் தகராறு; இளைஞரின் தலையை நசுக்கிக்கொன்ற பயங்கரம்.. மதுரையில் அதிர்ச்சி.!
பாஷாவின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அச்சமயம் அவரின் மனைவி ஷாஜிதா பானு, தங்களின் மதப்படி பிரேத பரிசோதனை செய்ய விடமாட்டோம் எனவும் பிரச்சனை செய்தார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பானுவை தங்களின் விசாரணை வளையத்திற்குள் வைத்தனர்.
மனைவியின் அதிர்ச்சி செயல்
உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் பாஷா கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானது. இதனால் பானுவிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் தான் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கவுஸ் பாஷாவுக்கு தோல் சார்ந்த நோய் இருந்த நிலையில், அவரின் அருகில் ஷாஜிதா பானு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது கணவன் - மனைவி தகராறு நடந்து இருக்கிறது. சம்பவத்தன்று நடந்த தகராறில், ஆத்திரமடைந்த பானு துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என்பது உறுதியானது.
சிறையில் அடைப்பு
அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை நம்பவைக்க, கணவருக்கு பேய்பிடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி இருக்கிறார். இதனால் கணவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறிய நிலையில், காவல்துறையினர் விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. உண்மையை அறிந்த அதிகாரிகள் பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நண்பனுக்கு ஆதரவாக சென்றவர் சரமாரியாக குத்திக்கொலை.!