#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடைசி வரை உன் ஆசை நிறைவேறாமலே போயிருச்சேமா! தீயாய் பரவும் சித்துவின் வீடியோ! கதறும் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது. ஆனால் இதற்கிடையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சித்ராவின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது புகைப்படங்கள்,வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்ரா தனது ஆசை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Mrg -க்கு Invite பண்ணனும் -னு தான் தளபதிய இன்னும் பாக்காமா இருந்தாங்கலாம் .. 💔🚶#Master @actorvijay pic.twitter.com/JP27T3fxVx
— Sᴀᴋᴛʜɪ ᴠꜰᴄ ❗️ (@Sakthii_VFC) December 10, 2020
அப்பொழுது அவர், நான் நடிகர் விஜய்யை என் திருமணத்திற்கு அழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதனால்தான் நான் அவரை இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை என அவரை புகழ்ந்து மிகுந்த உற்சாகத்துடன் பேசியுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் உன் ஆசை நிறைவேறாமலே போய்ட்டியே என கண்ணீர் வடிக்கின்றனர்.