#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திடீர் மரணம்!" திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி!
1974ம் ஆண்டு "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சங்கரன். இதையடுத்து துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, பெருமைக்குரியவள், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் புதுமைப்பெண், பகல் நிலவு, உனக்காகவே வாழ்கிறேன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம், ஆடி வெள்ளி, 13ம் நம்பர் வீடு, அமரன், சின்னக்கவுண்டர், ஜமீன் கோட்டை, அரண்மனைக் காவலன், காதல் கோட்டை, சதிலீலாவதி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மைக் மோகன், ரேவதி உள்ளிட்டோர் நடித்த "மௌன ராகம்" திரைப்படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்த இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதன் மூலம் பிரபலமடைந்த இவர் மேலும் பல படங்களில் நடித்துள்ளார்.
1931ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 92 வயதாகிறது. இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று இவர் இயற்கை எய்தினார். இவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.