கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"எப்ப பாரு ஃபோன நோண்டிக்கிட்டு.." பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.!! மாணவிக்கு நேர்ந்த துயரம்.!!
மதுரை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனே கதி என இருந்த மாணவி
மதுரை மாவட்டம், புதுப்பட்டி அருகே உள்ள கல்லுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு 14 வயதில் கனகா தேவி என்ற மகள் இருந்தார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி தினமும் செல்போனே கதி என இருந்திருக்கிறார். படிப்பு மற்றும் வீட்டு வேலை என எதையும் கவனிக்காமல் நாள் முழுவதும் செல்போன் பாவித்து வந்ததாக தெரிகிறது.
பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை
இந்நிலையில் மாணவி எப்போதும் செல்போனில் மூழ்கி இருந்ததால் எரிச்சலடைந்த அவரது பெற்றோர், கனகா தேவியை கண்டித்துள்ளனர். எந்நேரமும் செல்போனை பார்க்காமல் படிப்பு மற்றும் வீட்டு வேலைகளையும் கவனிக்குமாறு கடுமையாக கூறியிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: குடிகார கணவனின் செயல்.. கடுப்பில் சுத்தியலால் அடித்தே கொலை செய்த மனைவி.!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!