கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர், லேப் அசிஸ்டன்ட் உட்பட 4 பேர் கைது.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் அரசு கலை & அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். கடந்த சில மாதமாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து ஆகஸ்ட் 30 அன்று சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிகளாக 6 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் ரகசிய வாக்குமூலமும் சேகரிக்கப்பட்டது. இதன்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில், வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் சதிஷ் குமார் (39), காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஆய்வக உதவியாளர் அன்பரசு (30), தாய்முடி எஸ்டேட்டை சேர்ந்த என்சிசி அலுவலர் முரளிராஜ் (33), போட்டியை சேர்ந்த நான் முதல்வன் திட்ட அலுவலர் ராஜபாண்டி ஆகியோர் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மாணவிக்கு முத்தம் கொடுத்த எச்.எம்; உள்ளாடையுடன் ஊர்வலம் நடத்திய உறவினர்கள்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்.!
இதனையடுத்து, பெண்கள் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இவர்களை நேற்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த தந்தை; 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்த போலீஸ்.!