கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வீட்டிற்கு வந்ததும் அம்மா மகனை காணக்கூடாத காட்சி; நெஞ்சம் பதறும் சம்பவம்.!
வீட்டில் தனியாக இருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அர்ச்சனா (வயது 39). இவரின் மகன் ஹரிஷ் குமார் (வயது 19).
இதையும் படிங்க: சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவதூறு; ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை.!
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள ஹரிஷ் குமார், மேற்படி படிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று இரவு திடீரென வீட்டில் தனியாக இருந்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினமும் வேலைக்கு சென்று வரும் அர்ச்சனா, மீண்டும் 9 மணிக்கு வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது. நேற்றும் பணி முடிந்து வந்த போது, மகன் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல்துறையினர், ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: காதல் திருமணம் நடந்த 7 ஆண்டுகளில் துயரம்: பலபெண்களுடன் கணவன் நெருக்கம்; மனைவி விபரீதம்..!