கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சிம்புவுடன் ஏன் நடித்தேன் என்று தெரியவில்லை.. சர்ச்சையை கிளப்பிய குக் வித் கோமாளி பிரபலம்.? கோபத்தில் சிம்பு ரசிகர்கள்.!
பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்து வெற்றி படங்களை அளித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இதன்படி மார்ச் மாதம் 30 ஆம் தேதி சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், கௌதம் மேனன் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
இது போன்ற நிலையில், படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப் இந்த படத்தை பற்றி சுவாரசியமான சம்பவங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர், "சிம்புவுடன் நடிக்கும் போது மிகவும் பயந்தேன். பத்து தல திரைப்படத்தில் முதலமைச்சராக நடித்தேன்.
பத்து தல திரைப்படத்தில் ஏன் நடித்தோம் என்று கூட யோசித்தேன். சிம்புவுடன் நடித்தது குறித்து வீட்டில் நான் யாரிடமும் சொல்லவில்லை என்ற படத்தில் மற்றொரு பட பிரமோஷனில் சிம்புவை பற்றி சர்ச்சை கிளப்பும் விதமாக பேசியிருக்கிறார். இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.