#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது..! குக் வித் கோமாளி புகழ் கனிக்கு இவ்வளவு பெரிய மகள்களா..? வைரலாகும் புகைப்படம்.
குக் வித் கோமாளி புகழ் கனி வெளியிட்டுள்ள அவரது மகள்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் சீசனில் நடிகை வனிதா டைட்டில் வென்றநிலையில், ரம்யா பாண்டியன் இரண்டாவது இடம் பிடித்தார். தற்போது குக் வித் கோமாளி சீசன் இரண்டு ஒளிபரப்பாகிவருகிறது.
இதில், கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகிய நான்குபேரும் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டநிலையில் தற்போது ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, அஸ்வின் ஆகிய நான்குபேரும் போட்டியில் விளையாடிவருகின்றனர். இதில் கனி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
கனி பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜய லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி ஆவர். இந்நிலையில் கனி தனது இரண்டு மகள்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கனிக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா என கமெண்ட் செய்துவருகின்றனர்.